இந்தியாவை சுற்றி வளைக்கும் சீன போர் விமானத் தளங்கள் ?
|
சீனா அன்மைக்காலத்தில் இந்திய எல்லைப் புறங்ககளுக்குச் சமீபமாக, பல விமானத் தளங்களை அமைத்திருப்பதாக வெளியான தகவல்களின் அடிப்படையிலேயே இந்த ஊகந் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு, இந்திய எல்லைப்புறங்களுக்குச் சமீபமாக இதுவரை இருபதுக்கும் அதிகமான விமான நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விமான நிலையங்களிலிருந்து, இந்தியாவின் பல முக்கிய இடங்கள் மீது மிக விரைவாகவும், எளிதாகவும் விமானத் தாக்குதல் செய்ய முடியுமென மேலும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விடயம் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை மேலும் விரிவாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு கருத்துத் தெரிவிக்கையில், 'இது அச்சப்பட வேண்டிய விடயமன்று. அவர்கள் தமது நாட்டுப் பாதுகாப்புக்காக செய்யும் ஏற்பாடாக அது இருக்கலாம். நாம் நமது பாதுகாப்புக்கு உறுதியானவற்றைச் செய்வோம்' எனக் கூறினார். பாதுகாப்புதுறை இணையமைச்சரின் இந்தக் கருத்தும், சீனாவின் செயற்பாட்டை மறுக்கவில்லை என்றே கருத முடிவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே வேளை சீனத் தொழில் நுட்ப உதவியுடன், பாகிஸ்த்தான் போர் விமானத் தயாரிப்பில் ஈடுபடுவதும் குறிப்பிடத்தக்கது. |