வாஷிங்டன் : இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பொது எல்லை கிடையாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில், ஆப்கானிஸ்தான் எல்லை உள்ளது. "தற்போது இந்த காஷ்மீர் பாகிஸ்தான் வசம் உள்ளதால், ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே இப்போது பொது எல்லை கிடையாது' என, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஹால்ப்ரூக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹால்ப்ரூக் மேலும் குறிப்பிடுகையில், "ஆப்கானிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்துள்ள நாடுகள் இந்த பகுதியில் அமைதி ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க துணை சிறப்பு தூதர் டேனியல் பெல்ட்மேன் குறிப்பிடுகையில், "ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை இந்தியா மிக முக்கிய பங்காற்றுகிறது' என்றார். 