பிலாக்கரில் "Reactions Options" பதிவிற்கு கீழே கொண்டுவர?

நம்முடைய பிள்ளக்கில் மேலும் ஒரு வசதி இது. இது நம் வாசகர்கள் நம்முடைய பதிவு பிடித்திருந்ததா என்பதை இந்த Reactions சேர்ப்பதனால் நாம் தெரிந்து கொள்ளமுடியும். இதற்காக நாம் எந்த ஒரு கோடிங்கையும் சேர்க்க வேண்டியதில்லை. இது பிலாக்கரிலேயே வரும் அடிப்படை வசதி. இதை வெறும் இரெண்டே நிமிடங்களில் நம்முடைய பதிவில் கொண்டுவர முடியும்.  இதை நம் பிலாக்கரில் கொண்டுவர உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.


  • DASSBOARD

  • DESIGN

  •  PAGE ELEMENTS  

இப்பொழுது நமக்கு வரும் விண்டோவில் "Blog Posts" பகுதியில் கீழே வலது பக்கத்தில்  உள்ள Edit என்ற பட்டனை கிளிக் செய்யவும்.  கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளவும்.




இதை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.


 
இதில் நிறைய வசதிகள் இருக்கிறது இவைகளை பற்றி விரிவாக பிறகு காண்போம். இன்று நான் வட்டமிட்டு காட்டியிருக்கும் Reactions என்ற பகுதியை தான் நாம் இப்பொழுது சேர்க்க போகிறோம். இதற்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் குறியிட்டு கீழே உள்ள save கொடுத்தவுடன் அந்த widget நம்முடைய தளத்தில் சேர்ந்து விடும்.  


இதில் நாம் மாற்றங்கள் செய்ய விரும்பினால் அதற்கு பக்கத்தில் உள்ள Edit என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு அந்த பாக்ஸில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் வரும் இந்தில் நமக்கு தேவையான வார்த்தைகளை நாம் சேர்த்துகொள்ளலாம். ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் இடையில் கமா(,) போடவும். இதில் சிறப்பு என்னவென்றால் இதில் நாம் தமிழில் கூட வார்த்தைகளை சேர்க்கலாம்.    


     நமக்கு தேவையான மாற்றங்கள் செய்த பிறகு அதற்கு பக்கத்தில் உள்ள save பட்டனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் நமக்கு  கீழே உள்ளதை போல விண்டோ வரும் 


 


கீழே வட்டமிட்டு காட்டியிருப்பது நம்முடைய பதிவில் தெரியும் preview ஆகும் இதை Drag செய்வதன் மூலம் நமக்கு தேவையான இடத்தில் பொருத்தி கொள்ளலாம். இதை எல்லாம் முடித்த பிறகு கீழே உள்ள SAVE பட்டனை அழுத்தினால் நம்முடைய பதிவில் நாம் சேர்த்த விட்ஜெட் வந்திருக்கும்.    


பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும். 


டுடே லொள்ளு 


Photobucket


எப்பா யாரும் சத்தம் போடாதீங்க பதிவு போட்டுட்டு இப்பதான் தூங்கிகிட்டு இருக்கான் 

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint