சென்ட்ரலில் பராமரிப்பு பணி: 9 ரெயில்கள் நாளை பெரம்பூரில் இருந்து புறப்படும்; சென்ட்ரல்-அரக்கோணம் ரெயில் ரத்து

சென்னை, டிச. 9-

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் சீரமைக்கும் பணி மற்றும் பேசின் பாலம் சிக்னல் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயில்கள் மாற்றி விடப்படுகிறது. 4 கட்டமாக நடைபெறும் இந்த பராமரிப்பு பணிகள் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. நாளை (10-ந் தேதி) 3-வது கட்டமாக பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் பயணிகள் ரெயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.

பித்ரகுண்டா- சென்ட்ரல் ரெயில் கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படுகிறது.

சென்ட்ரலுக்கு வரக்கூடிய 9 ரெயில்கள் பெரம்பூருக்கு திருப்பி விடப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

டாடாநகர்- ஆலப்புழை, கவுகாத்தி- பெங்களூர், யஸ்வந்த்பூர்- முசாபர்பூர், ஜெய்ப்பூர்- கோவை, தர்பங்கா- பெங்களூர், பெங்களூர்- கவுகாத்தி, பெங்களூர்- பாட்னா, ஆலப்புழை- டாடாபாத், சாலிமர்- திருவனந்தபுரம் ஆகிய 9 ரெயில்கள் பெரம்பூரில் இருந்து புறப்பட்டுச்செல்லும்.

திருவனந்தபுரம்- சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (எண்: 2696) எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு காலை 10 மணிக்கு வரும்.

சென்ட்ரல்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (2695) மாலை 3.40 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டுச்செல்லும்.

தனித் தெலுங்கானா போராட்டம் உண்ணாவிரதத்தை கைவிட சந்திரசேகரராவ் மறுப்பு; கலவரத்தில் 103 பஸ்கள் எரிப்பு

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சந்திரசேகரராவ் மெதக் மாவட்டம் சித்திப்பேட்டையில் உண்ணா விரதம் தொடங்கினார். அவரை போலீசார் கைது செய்து கம்மம் சிறையில் அடைத்தனர். அங்கும் அவர் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவர் கம்மம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சந்திரசேகரராவ் சிகிச்சை பெற மறுத்ததால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு நீரிழிவு, ரத்த அழுத்த கோளாறு ஏற்பட்டதால் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது.

இதையடுத்து மனித உரிமை ஆணைய நீதிபதி சுபாஷன் ரெட்டி உத்தரவுப்படி சந்திரசேகர ராவ் ஐதராபாத் நிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் ஏற்பட்டது. காய்ச்சலுக் கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. நுரையீரலில் தொற்று கிருமி இருந்ததால் அதை போக்க டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு அவரது உடல்நிலை ஓரளவு தேறியது.

சந்திரசேகரராவ் இன்று 6-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரிடம் டாக்டர்கள் திட உணவு எடுத்துக்கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய-மாநில அரசுகள் உறுதி அளித்தால்தான் உண் ணாவிரதத்தை கைவிடுவேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.

இதனால் டாக்டர்கள் அவருக்கு திரவ உணவை வலுக்கட்டாயமாக அளித்து வருகிறார்கள். குளுக்கோசும் ஏற்றப்படுகிறது.

சந்திரசேகரராவ் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் தெலுங்கானா பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. இதனால் தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளி- கல்லூரிகளுக்கு 15 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கலவர பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களாக தெலுங்கானா பகுதியில் கலவரத்தில் 103 அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 22 அரசு அலுவலகங்களை தெலுங்கானா கட்சி தொண்டர்கள் தீ வைத்து எரித்தனர். 24 தனியார் பஸ்கள் அடித்து உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 5392 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தெலுங்கானா கட்சி தொண்டர்கள் நேற்று இரவு ஐதராபாத் வந்த மந்திரிகள் பொன்னால லட்சுமய்யா, சுனிதா லட்சுமாரெட்டி ஆகியோரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து தொண்டர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

இதே போல் ஐதராபாத் பஞ்சராஹில்ஸ் பகுதியில் வசிக்கும் தெலுங்கானா கட்சி எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி வீட்டை மாணவர்கள் முற்றுகையிட்டனர். தெலுங்கானா தனி மாநிலம் அமைய பாராளு மன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்ற போராட வேண்டும், தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷ மிட்டனர்.

அப்போது அங்கு வந்த விஜயசாந்தி பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற போராடுவேன் என்று உறுதி அளித்தார். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவர் நடிகர் சிரஞ்சீவி, தொடர் உண்ணாவிரதம் இருக்கும் சந்திரசேகரராவுடன் மத்திய-மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதே போல் காங்கிரஸ் எம்.பி. அனுமந்தராவும் சந்திரசேகரராவுடன் பேசி தெலுங்கானா பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுவரை மத்திய-மாநில அரசுகள் சார்பில் சந்திர சேகரராவுடன் யாரும் பேச்சு வார்த்தை நடத்த வில்லை. சந்திரசேகரராவ் 2 நாட்களுக்கு முன்பு கூறும்போது, கேபினட் அந்தஸ்துள்ள மத்திய மந்திரி யாராவது என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரலாம் என்று கூறி இருந்தார். ஆனால் மத்திய மந்திரி யாரும் அவரை சந்திக்க வரவில்லை.

இதனால் அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார். தெலுங்கானா கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் யாரும் வராததால் விரக்தி அடைந்தனர்.
1 1

by சசிகுமார் · 0

ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம்



Top world news stories and headlines detail

நாகப்பட்டினம்: தமிழகத்தில் ஒரே நாளில் பள்ளிக்குழந்தைகள் சென்ற 2 வேன்கள் விபத்தில் சிக்கியது. இதில் ஆசிரியைகள் உள்பட பள்ளிக்குழந்தைகள் 10 பேர் இறந்தனர். 40 பேர் காயமுற்றனர். கவலைக்கிடமான நிலையில் சில குழந்தைகள் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பள்ளி வேன்களில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி ‌வந்ததால் இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.



நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கலைவாணி மெகா மெட்ரிக்., மழலை பள்ளியை சேர்ந்த வேன் வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. இந்‌நேரத்தில் கத்திரிபுலம் என்ற பகுதியில் சென்ற வேன் , எதிர்பாராத விதமாக, டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.



ஆசிரியையும் பலி: இதில் ஆசிரியை குழந்தைகள் உள்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் குழந்தைகள் பலரை உயிருக்கு போராடிய நிலையில் மீட்டுள்ளனர். இந்த வேனில் ஆசிரியைகள் உள்பட 25 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. பல குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



மொபைல் பேசி வந்த வேன் டிரைவர் : இந்த ‌வேனை ஓட்டி வந்த டிரைவர் மொபைல் போன் பேசிக்கொண்டே வந்தார் என வேனில் இருந்த மாணவர்கள் கூறினர். ‌மொபைலில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு வளைவு வந்தது இதனையடுத்து வேனை திருப்பும்போது இந்த வேன் தடுமாறியது. இதில் கூடுதல் தகவல் ‌என்னவெனில் வேன் மிக பழையதாக இருந்தது. உரிய கண்டிஷனும் இல்லை என அங்கிருந்து நமது செய்தியாளர் தெரிவிக்கிறார். டிரைவரும், கிளீனரும் வேனில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



மருத்துவ பரிசோதனை செய்ய பெற்றோர்கள் எதிர்ப்பு : இறந்த குழந்தைகளின் உடல் மருத்துவ பரிசோதனை ( போஸ்ட் மார்டம் ) செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்துதான் கொடுப்போம் என மருத்துவர்களும், போலீசாரும் தெரிவித்து விட்டனர்.



நிவாரணம் அறிவிப்பு : இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரமும், ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



ஆத்தூரில் மற்‌றொரு விபத்து: சேலம் மாவட்டம் ஆத்தூரில் சென்ற பள்ளி வேன் மரத்தில் மோதியதில் 30 குழந்தைகள் காயமுற்றனர். ஆத்தூர் அருகே சரஸ்வதி மெட்ரிக்., பள்ளியை சேர்ந்த வேன் வழக்கம் போல் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. இதில் 18 பேர் தான் பயணிக்க முடியும். ஆனால் 30 ‌பேரை ஏற்றி சென்றுள்ளனர். நரிக்குறவன் காலனி அருகே நிலைதடுமாறிய வேன் தென்னை மரத்தின் மீது மோதியது. இதில் 30 குழந்தைகள் காயமுற்றனர். டிரைவர் உள்பட 5 பேர் நிலை நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமுற்றவர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் குழந்தைகளின் பெற்றோர்கள் கதறி அழுதபடி நிற்கின்றனர்.



தமிழகத்தில் மழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதனை முன்னிட்டு தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏதும் சேதம் ஏற்படாமல் தடுக்க அரசு நிர்வாகம் உஷாராக இருந்த நேரத்தில் பள்ளி குழந்தைகள் சென்ற வேன் விபத்துக்குள் சிக்கியது.

'Tamilish'

by சசிகுமார் · 0

இந்தியாவை சுற்றி வளைக்கும் சீன போர் விமானத் தளங்கள் ?




இந்தியாவை சீனா, கடற் பரப்பில் ஏறக்குறைய சுற்றி வளைத்திருப்பதாக் கூறப்படுவது போல், தற்போது நிலப்பரப்பிலும் சுற்றி வளைக்கப்படுவதாக ஊகந் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சீனா அன்மைக்காலத்தில் இந்திய எல்லைப் புறங்ககளுக்குச் சமீபமாக, பல விமானத் தளங்களை அமைத்திருப்பதாக வெளியான தகவல்களின் அடிப்படையிலேயே இந்த ஊகந் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு, இந்திய எல்லைப்புறங்களுக்குச் சமீபமாக இதுவரை இருபதுக்கும் அதிகமான விமான நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விமான நிலையங்களிலிருந்து, இந்தியாவின் பல முக்கிய இடங்கள் மீது மிக விரைவாகவும், எளிதாகவும் விமானத் தாக்குதல் செய்ய முடியுமென மேலும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது விடயம் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை மேலும் விரிவாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு கருத்துத் தெரிவிக்கையில், 'இது அச்சப்பட வேண்டிய விடயமன்று. அவர்கள் தமது நாட்டுப் பாதுகாப்புக்காக செய்யும் ஏற்பாடாக அது இருக்கலாம். நாம் நமது பாதுகாப்புக்கு உறுதியானவற்றைச் செய்வோம்' எனக் கூறினார். பாதுகாப்புதுறை இணையமைச்சரின் இந்தக் கருத்தும், சீனாவின் செயற்பாட்டை மறுக்கவில்லை என்றே கருத முடிவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே வேளை சீனத் தொழில் நுட்ப உதவியுடன், பாகிஸ்த்தான் போர் விமானத் தயாரிப்பில் ஈடுபடுவதும் குறிப்பிடத்தக்கது.

by சசிகுமார் · 0








இவர்கள் யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு 100000000000பரிசு தருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது .

by சசிகுமார் · 0

இவர் யார் தெரியுதா ?


ivar

by சசிகுமார் · 3

சட்டசபை இடைத்தேர்தலில் ராஜசேகர ரெட்டி மனைவி போட்டியின்றி தேர்வுஅனைத்து கட்சிகள் முடிவு

ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி 2 மாதங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அவரது தொகுதியான புலிவெந்த லாவில் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ராஜசேகரரெட்டி மனைவி விஜயலட்சுமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து தெலுங்கு தேசம், பிரஜாராஜ் ஜியம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு லோக் சத்தா, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. விஜயலட்சுமியை போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில் புலிவெந்தலா இடைத்தேர்தலில் மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இன்று மதியம் வரை விஜயலட்சுமியை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.

இது பற்றி ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன்மோகன் ரெட்டி நிருபர்களிடம் கூறும் போது, “எனது தாயாரை போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க உதவிய அனைத்து கட்சி தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

by சசிகுமார் · 0

இன்று பாம்புகளை பற்றி!!!!!!!!!!!!!!!!


பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.

இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. ஒருவகையான நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. இவ்வகையில் சேர்ந்ததே நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன. வேறு சில நச்சுப்பாம்புகள் இரத்தக் குழாய்களைத்தாக்கி அழிக்க வல்லன. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்தது. இவற்றின் தோல் செதில்களைக் கொண்டுள்ளது. நாகப்பாம்பு, கட்டுவிரியன் போன்ற சில பாம்புகள் நச்சுத்தன்மை கொண்டவை. இலங்கையில் சுமாராக 216 வகைப் பாம்பு இனங்கள் உள்ளன. நச்சுத் தன்மையுடைய பாம்பின் தலையில் <> வடிவம் காணப்படும்.

by சசிகுமார் · 0

“9” எண் கூடுதலாக சேரும் செல்போன்களில் 11 இலக்கஎண்கள்; ஜனவரி 1 முதல் அமல்



புதுடெல்லி, டிச. 2-
செல்போன்களில் தற்போது 10 இலக்க எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் 10 இலக்க எண் போதாததாக உள்ளது. விரைவில் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள செல்போன்களின் எண்ணிக்கை 50 கோடியை எட்டும் நிலையில் உள்ளது. இது 2014-ம் ஆண்டு 100 கோடியை எட்டிவிடும் என்று கணித்து உள்ளனர். அப்போது 10 இலக்க எண்ணை பயன்படுத்தினால் எல்லோருக்கும் போன் எண் வழங்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே 10 இலக்க எண்ணை 11 இலக்க எண்ணாக மாற்ற மத்திய டெலிபோன் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி தற்போது உள்ள எண்ணுடன் முன் பகுதியில் கூடுதலாக “9” என்ற எண் சேர்க்கப்படும் என்று டெலிபோன் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது ஜனவரு மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தனர். ஆனால் இதுபற்றி டெலிபோன் நிறுவனங்களுக்கு இன்னும் டெலிபோன் துறை எந்த தகவலும் அனுப்பவில்லை.
10 இலக்க எண்ணை 11 இலக்கமாக மாற்றும் போது டெலிபோன் நிறுவனங்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் நிலை உள்ளது. ஏற்கனவே உள்ள 10 இலக்க எண்களுக்கு ஏற்றார் போல கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்களில் சாப்ட்வேர்களை உருவாக்கி வைத்துள்ளனர். அதை 11 இலக்க எண்ணாக மாற்றும் போது புதிய சாப்ட்வேர்களை உருவாக்க வேண்டும். இதில் பல சிக்கல்கள் ஏற்படுவதுடன் பண செலவும் ஆகும் என்று டெலிபோன் நிறுவனங்கள் கூறுகின்றன.
மேலும் ஜனவரி 1-ந் தேதியே அமலுக்கு கொண்டு வருவதில் பிரச்சினை ஏற்படும். எனவே கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

by சசிகுமார் · 0

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint