நம்முடைய பிளாக்கரில் Subscribe Feed Count விட்ஜெட் கொண்டு வர

நம்முடைய பதிவில் எப்படி Feed Burner Subscribe by Email என்ற விட்ஜெட்டை எப்படி இணைப்பது என்பதை முந்தைய  பதிவில் பார்த்தோம்.  பார்க்காதவர்கள் இந்த லிங்கில் சென்று பார்த்து கொள்ளவும்.





இன்று நாம் பார்க்க போகும் பதிவும் அதை சம்பந்தப்பட்டதே. நம் பிளாக்கரில் நம் இணைத்த Subscribe form மூலம் நம்முடைய வாசகர்கள் இனைந்து இருப்பார்கள். அது போல் எத்தனை பேர் நம்முடைய தளத்தை subcribe செய்து உள்ளனர் என்ற Feed Count விட்ஜெட்டை எப்படி நம் தளத்தில் கொண்டு வருவது என்று பார்ப்போம்.

இந்த விட்ஜெட்டை கொண்டு வர இந்த லிங்கில் கிளிக் செய்யவும். http://feedburner.google.com இந்த லிங்கில் சென்ற உடன் உங்களுடைய Google Id, Password கொடுத்து உள்ளே சென்ற வுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.






feed burner
இது போல் வந்தவுடன் உங்களுடைய பிளாக்கின் பெயர் மேல் கிளிக் செய்யுங்கள்.  அடுத்து வரும் விண்டோவில் Publicize என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு வரும் விண்டோவில் Feed count என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் 



Feed count
வரும் விண்டோவில் உங்களுக்கு தேவையான நிறத்தை தேர்வு செய்து கொண்டு உங்களுக்கு தேவையான நிறத்தை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Active or Save பட்டனை அழுத்தவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.





copy this code
இதில் நீங்கள் Blogger தேர்வு செய்து Go பட்டனை அழுத்தினாலே நம் தளத்தில் சேர்ந்து விடும். ஆனால் அதற்காக தனி இடம் ஒதுக்க வேண்டி வரும். அதனால் நம்முடைய Subscribe Me என்ற பகுதிலேயே இந்த விட்ஜெட்டையும் சேர்த்து விட்டால் இதற்காக தனி இடம் ஒதுக்க தேவையில்லை பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.  இது போல இணைக்க மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.  காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Design சென்று உங்களுடைய Subscribe விட்ஜெட்டை திறந்து நீங்கள் காப்பி செய்த கோடிங்கை அதில் உள்ள கொடிங்கிர்க்கு கீழே பேஸ்ட் செய்யவும். கீழே படத்தை பார்த்து கொள்ளுங்கள்




paste your code before

படத்தில் நான் காட்டியுள்ள இடத்தில் உங்களுடைய கோடிங்கை பேஸ்ட் செய்து கீழே SAVE என்ற பட்டனை அழுத்தி உங்கள் தளம் சென்று பார்த்தால் உங்களுடைய Feed Count விட்ஜெட்டிலேயே வந்திருக்கும். 


பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்.


டுடே லொள்ளு     
Photobucket


அவன குரங்குன்னு சொல்லிட்டு நீதாண்டா குரங்கு மாதிரி பண்ற 


தல அப்படியே ஒரு ஓட்டு போட்டு போங்களேன் 





All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint