நம் தளத்திற்கு விருப்பம் போல் favicon உருவாக்க ஒரு சூப்பர் மென்பொருள்

Favicon மற்ற தளங்களில் இருந்து காப்பி செய்வதென்று போன பதிவில் பார்த்தோம். அதை பார்க்காதவர்கள் இங்கு சென்று பார்த்துகொள்ளவும்.   http://vandhemadharam.blogspot.com/2010/07/favicon.html



ஆனால் நாம் இங்கு காணப்போவது நமக்கு தேவையான Favicon நாமே நம் விருப்பபடி உருவாக்கி கொள்ளலாம். இந்த மென்பொருள் இருக்கும் போது நாம் ஏன் மற்ற தளங்களுக்கு சென்று காப்பி செய்யவேண்டும். இதில் நாம்







உருவாக்குவது மிகவும் எளிதான காரியமாகும். இந்த மென்பொருளை தரவிறக்க இந்த லிங்கில் கிளிக் செய்யவும். http://www.4shared.com/file/zZ8yQXGv/icofxsetup.html   டவுன்லோட் செய்தவுடன் .exe பைலை ரன் செய்து  இன்ஸ்டால் கொள்ளவும்.





இதில் முதலில் New கிளிக் செய்யுங்கள். க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
   


ஓகே கொடுத்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல இருக்கும். நாம் இந்த விண்டோவில் வரைய தொடங்கலாம். நாம் இந்த விண்டோவில் வரைய வரைய நமக்கு நம்முடைய Fevicon உடைய preview மேலே தெரியும். 


இதில் நாம் வரைவதற்கு எளிதாக rectangle circle போன்ற பல டூல்கள் கொடுத்து உள்ளார்கள். நாம் நம்முடைய பெவிகானில் ஏதேனும் படத்தை சேர்க்க விரும்பினால் நமக்கு இடது பக்கத்தில் ஓரத்தில் உள்ள Explorer விண்டோவில் நமக்கு தேவையான படத்தை Drag செய்து விட்டாலே போதும் அது நம் Fevicon விண்டோவில் சேர்ந்து விடும். 




நமக்கு தேவையான பைலை சேவ் செய்து நம் தளத்தின் Fevicon ஆக மாற்றி கொள்ளலாம்.நம் பிலாக்கில் Fevicon மாற்ற தெரியாதவர்கள் எப்படி மாற்றுவது என்று இந்த லிங்கில் சென்று பார்த்து கொள்ளவும்.http://vandhemadharam.blogspot.com/2010/04/favicon.html         


டுடே லொள்ளு 




யாராவது வேலை காலி இருந்தா சொல்லுங்கப்பா 

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint