சிறியதை பெரியதாக்கி Screen Shot எடுக்க ஒரு சிறிய மென்பொருள்

நாம் பிலாக்கில் போடும் பதிவில் ஏதேனும் பக்கத்தின் Screen Shot எடுத்து போடும் அப்படி போடும் போது நம்முடைய பக்கத்தின் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக இருக்கும் இதை தவிர்ப்பதற்காகவே இந்த பதிவு. இந்த முறையில் நாம் Screen Shot எடுத்து அப்படியே .png பைலாக சேமித்து கொள்ளலாம். இன்னும் ஒரு பயன் இதில் marker கூட கொடுத்து







இருக்கிறார்கள். நாம் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கும் போது முக்கியமானதை குறிப்பிட்டு காட்டலாம். இவ்வளவு பயன்கள் அடங்கியுள்ள இந்த மென்பொருளின் அளவு 267kb தான்.

இந்த மென்பொருளை தரவிறக்க இந்த லிங்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.



     தரவிறக்கி .Zip பைலை Extract செய்து ZoomIt என்ற பைலை ஓபன் செய்தால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.





இதில் உங்களுக்கு தேவையான Shorcut key கொடுத்து கொள்ளலாம்.   ஓகே கொடுத்து விடுங்கள்.


இப்பொழுது நாம் ஒரு பக்கத்தை Screen Shot எடுப்போம் வாருங்கள். 
  • அதற்கு முதலில் அந்த பக்கத்தை திறந்து கொள்ளுங்கள். திறந்து கொண்டு Ctrl+1 அழுத்துங்கள். நீங்கள் Shortcut key மாற்றி இருந்தால் அந்த key கொடுக்கவேண்டும். 

  • இப்பொழுது நமக்கு அந்த பக்கம் பெரியதாகி வரும் இப்பொழுது அந்த பக்கத்தில் கிளிக் செய்யுங்கள். 

  • க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு மார்க்கர் வரும். அதில் முக்கியமான பக்கத்தை குறிப்பிட்டு காட்டலாம்.

  • நீங்கள் உங்களுக்கு வேண்டிய நிறத்தில் marker ன் நிறத்தை மாற்றி கொள்ளலாம். (உம்) பச்சை- g , நீலம்- b ,சிவப்பு- r - அழுத்தவும்.    

  • இதில் நாம் ஏதாவது எழுத்துக்கள் சேர்க்க வேண்டும் என்றாலும் சேர்த்து கொள்ளலாம்.   

  • தமிழில் கூட சேர்த்து கொள்ளலாம். 

  • இதில் நாம் Alarm கூட செட் செய்து வைத்துகொள்ளலாம்.   

இன்னும் நிறைய நன்மைகள் உள்ளன. உபயோகித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். மிக சிறந்த மென்பொருள் இது.



டுடே லொள்ளு
எங்கப்பா இவ்ளோ வேகமா போற 


All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint