சென்னையில் முதன்முதலாக நடமாடும் ஏ.டி.எம். மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்





 தமிழ் நாட்டில் முதன் முதலாக நடமாடும் ஏ.டி.எம். சேவையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று தொடங்கியது. சென்னை கோட்டையில் இதன் தொடக்க விழா இன்று நடந்தது. இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பட் தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக ஏ.டி.எம். சேவையை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் பொன்முடி, பெரிய கருப்பன் பொது மேலாளர் தேனப்பன், உதவி பொது மேலாளர் பார்த்தசாரதி, ஐ.ஓ.பி. தொழிற்சங்கம் சார்பில் பாலு, ஸ்ரீதர், வாசு, குமார் உள்பட பலர் கலந்த கொண்டனர்.
இது குறித்து ஐ.ஒ.பி. தலைவர் பட் மற்றும் பொது மேலாளர் தேனப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியன் ஓவர்சிஸ் பாங்கி சார்பில் சென்னையில் 70 இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இப்போது தமிழ்நாட்டி லேயே முதல் முறையாக ஐ.ஒ.பி. நடமாடும் ஏ.டி.எம். மையத்தை தொடங்கி இருக்கிறது.

இந்த நடமாடும் ஏ.டி.எம். மையம் ராயபுரம் (செயிண்ட் தெரசா பள்ளி அருகில்) வண் ணாரப்பேட்டை (என்.பி.எல். அகஸ்தியா அபார்ட்மெண்ட் அருகிலும்), பாரிமுனை (ஐகோர்ட்டு அரு கிலும்) வியாசர்பாடி (கண்ணதாசன் நகர் மின் அலுவலகம்) வால்டாக்ஸ் ரோட்டில் (ரெட்டையார் பிள்ளை கோவில் தெரு, அரசு அச்சகம் பின்புறம்) ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

ஒவ்வொரு இடத்திலும் 2 மணி நேரம் இந்த நடமாடும் ஏ.டி.எம். நிலையம் நின்று செல்லும். இது செயற்கை கோள் மூலம் செயல்படும். இந்த திட்டத்திற்கு வரவேற்பு இருந்தால் மேலும் பல நடமாடும் ஏ.டி.எம். சேவை தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் மார்ச் மாதத்திற்குள் 1000 ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint