எட்டு கால்களுடனும், இரண்டு உடல்களுடனும் பிறந்த அதிசய குழந்தை

       இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஒரு வறுமையான கிராமத்தில் பிறந்த குழந்தை. அனைத்து பெற்றோர்களும் குழந்தை பிறந்தால் சந்தோசப்படுவார்கள் ஆனால் இக் குழந்தையை  பார்த்தவுடன் அந்த பெற்றோர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள். ஏனென்றால் இக் குழந்தை  ஒரு வித்தியாசமான உடலமைப்பை பெற்று இருந்தது. இந்த குழந்தைக்கு எட்டு கால்களும் இரண்டு உடலைப்பும் பெற்று காணப்பட்டது.அந்த கிராம மக்கள் அக் குழந்தையை இந்து கடவுளின் அவதாரமாக நினைத்தனர். ஆகையால் அப்பெண்ணுக்கு லட்சுமி டட்மா என்று பெயர் சூட்டியுள்ளனர்.    



அந்த ஏழை பெற்றோர்கள் அவர்களால் முடிந்தவரை சிறிய மருத்துவமனைகளில் காண்பித்தனர். ஆனால் அந்த மருத்துவர்களோ குழந்தையை காப்பாற்ற முடியாது எவ்வளவு நாள் உயிரோடு இருக்குமென்றே சொல்ல முடியாது என்று மற்றொரு அதிர்ச்சையை கூறினார். இந்த செய்தி ஒரு நாளிதையில் வெளியானது. உலகம் முழுவதும் இந்த செய்தி பரவியது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பெங்களூரை சேர்ந்த Sprash Hospital உரிமையாளர் Dr. Sharan patil என்பவர் பீகார்க்கு சென்று (சுமார் 2000miles) லட்சுமி டட்மா பெற்றோரை சந்தித்து அக் குழந்தைக்கு தேவையான அறுவை சிகிச்சையை இலவசமாக நாங்கள் செய்து தருகிறோம் என்று கூறி அந்த பெற்றோர்களின் மனதில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறினார். 
   பின்பு இதற்காக ஒரு குழுவை அமைத்து சுமார் ஒரு மாதமாக அந்த சிகிச்சைக்கு தேவையான விஷயங்களை திட்டமிட்டார்கள். கடைசியில் 2007 ஆம் ஆண்டு அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்த பட்டது. உலகத்தின் அனைத்து மதத்தினரும் அன்று ஒரு நாள் கடவுளிடம் வேண்டி கொண்டது ஒன்றே ஒன்று தான் லட்சுமி டட்மா நடக்கும் சிகிச்சையில் பூரணம் அடையவேண்டும். அந்த ஆபரேஷன் நடந்த ஹாஷ்பிடலை சுற்றி ஆயிரகணக்கான பத்திரிகையாளர்கள் குழுயிருந்தார்கள் சுமார் 27 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷன் அந்த மருத்துவர்களின் கடின உழைப்பினால் நல்ல படியாக முடிந்தது.  இதை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த அனைத்து உள்ளங்களிலும் ஒரு இனம் புரியாத சந்தோஷம். இப்பொழுது அந்த குழந்தை பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறது.
     
மற்ற குழந்தைகளை போல விளையாடுகிறது. அந்த குழந்தை கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு உடல் தகுதி பெற்று உள்ளது.
   
இன்றும் இந்த குழந்தையை 3 மாதத்திற்கு ஒருமுறை அந்த மருத்துவ குழு சென்று பரிசோதித்துவிட்டு வருகிறது. 
இந்த குழந்தைக்கு எதிர் காலத்தை காட்டிய மருத்துவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.  


All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint