ஒரே நொடியில் uppercaseல் அடித்ததை lowercaseக்கு மாற்ற

நாம் ஏதாவது ஈமெயிலோ அல்லது WORDல் ஏதாவது டாகுமென்ட் உருவாக்கும் போது நாம் பெரிய எழுதுக்களில்(UPPER CASE) அடிக்க வேண்டியதை எல்லாம் சிறிய எழுத்துக்களில்(lower case)  மறந்து டைப் செய்து விடுவோம். அப்படி சிறிது வரிகளை அடித்தால்  அதை திரும்பவும் அழித்து மறுபடியும் டைப் செய்து விடுவோம். ஆனால் அலுவலகங்களிலோ அல்லது நிறைய பக்கங்களை அடித்துவிட்டால் என்ன செய்வது. நாம் அனைத்தையும் அடித்து திரும்பவும் அடிப்பதற்குள் நம்ம பாஸ் கிட்ட இருந்து போன் வரும். அவர்கிட்ட இந்த விஷயத்த சொன்னால் அவ்வளவு தான் நம்பளை கடித்து குதறிவிடுவார் அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த தளம் நமக்கு உதவுகிறது. http://www.textconvert.com/ இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.



இதில் நீங்கள் தவறாக டைப் செய்த மொத்த எழுத்துக்களையும் செலக்ட் செய்து காப்பி செய்து கொள்ளுங்கள். காப்பி செய்து கொண்டு இந்த தளம் வந்து பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல வரும்





நீங்கள் மேலே உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து விட்டு எந்த வடிவில் மாற்ற வேண்டுமோ (upper case OR lower case) அதற்கு ஏற்றார் போல செலக்ட் செய்து Convert Text என்ற பட்டனை அழுத்தியவுடன் நாம் கொடுத்த எழுத்துக்கள் மாறி இருக்கும். அவ்வளவு தான் திரும்பவும் இதனை காப்பி செய்து நம்முடைய டாகுமெண்டில் பேஸ்ட் செய்து கொள்ளலாம். 
இனிமேல் நாம் எந்த எழுத்துக்களில் வேண்டுமென்றாலும் டைப் செய்து நம்முடைய விருப்பதிருக்கு ஏற்றார் போல நாம் மாற்றி கொள்ளலாம்.


டுடே லொள்ளு     
Photobucket
நம்ம பாட்டுக்கு அப்படியே ஒரு டான்ஸ் போட்டுட்டு போங்கப்பா

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint