ஒரு நாள் கிரிக்கெட்டில் முதலில் 200 அடித்தது சச்சின் இல்லை

நம் அனைவரும் சச்சின் தான் முதன் முதலில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 200 ரன்களை கடந்த முதல் வீரர் என்று நினைத்து கொண்டிருந்தால் அது தவறு. சச்சினுக்கு முன்பே அந்த சாதனையை ஆஸ்திரேலியாவின் முன்னால் கேப்டன் பெலிண்டா கிளார்க்  என்பவர் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு  நிகழ்த்தி விட்டார்.

(என்ன நம்ப வில்லையா கீழே உள்ள படத்தை பாருங்கள்).  

1997 ஆம் ஆண்டு நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்தவர் இந்த பெலிண்டா கிளார்க்.  உலக கோப்பையில் டென்மார்க்கிற்கு எதிராக நடந்த போட்டியில் முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டகாரராக இறங்கிய இந்த பெண்மணி டென்மார்க்கின் பந்து வீச்சை எளிதாக எதிர் கொண்டார். கிடைத்த நல்ல பந்துகளை பவுண்டரிகளுக்கும் விரட்ட தவறவில்லை.
    
ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 413 ரன்களை குவித்து இருந்ததது. பெலிண்டா கிளார்க் மட்டும் தனி ஆளாக 229* குவித்து கடைசிவரை களத்தில் அவுட் ஆகாமல் இருந்தார். இவர் வெறும் 155 பந்துகளில் இந்த இமாலய ஸ்கோரை சர்வ சாதரணமாக அடித்து நொறுக்கினார். 
ஆனால் இதில் வருத்தபடக்கூடிய விஷயம் என்ன வென்றால் இந்த சாதனை அன்று அந்த மைதானத்தில் இருந்தவர்கள் மட்டுமே காண முடிந்தது. ஏனென்றால் அந்த மேட்சை எந்த டிவி சேனலிலும் ஒளிபரப்ப வில்லை. செய்தி தாளில் ஏதோ ஒரு மூலையில் போட்டு இருந்தார்கள்.  
இதெல்லாம் நடந்தது ஏதோ அண்டார்டிகாவிலோ, ஆப்பிரிக்காவிலோ இல்லை. கிரிக்கெட்டை கோலாகலமாக கொண்டாடும் நம் இந்தியாவின் மும்பை மாநகரத்தில் தான்.  
இனிமேலாவது முதலில் 200 ரன்களை கடந்தது சச்சின் என்று கூறுவதை விட்டு விட்டு ஆடவர் கிரிக்கெட்டில் 200 ரன்களை கடந்தவர் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும் .(இதை பார்த்து நான் ஏதோ சச்சினுக்கு எதிராக பேசுவதாக என்ன வேண்டாம். சச்சின் பவுண்டரி அடித்தால் கைதட்டும் ரசிகர்களில் நானும் ஒருவன்). 


இந்த பெண்மணியை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து http://www.cricinfo.com/ci/engine/match/67194.html பார்த்து கொள்ளுங்கள். 
பதிவை பற்றி உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் கூறவும். 
    இப்படிக்கு உங்கள் 


All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint