சச்சின் 200அடித்ததால் அவருடைய சம்பளம் குறைகிறது-அணி நிர்வாகம்



என்னடா இது தலைப்பை பார்த்தால் ஒண்ணுமே புரியலையே 200 அடித்தால் சம்பளம் எப்படி குறையும், கூட தானே செய்யும் என்ன முட்டாள் தனமான முடிவு என்று அனைவரும் புலம்புவது எனக்கும் புரிகிறது. இப்படி நடந்தால் எப்படி இருக்கும் ஒரு சிறிய கற்பனை. (இது யார் மனதையும் புண்படுத்த அல்ல வெறும் நகைச்சுவைக்கே)

200 RUNS / 147 BALLS / 25X4 / 3X6
இவர் சாதனை செய்தார் அதை ஒத்துக் கொள்கிறோம் ஆனால் ஆனால் ஆனால்  


25 X 4S = 100 Runs
3 X 6S = 18 Runs
இதிலிருந்து இவர் வெறும் 28 பந்துகளில் பெற்ற ரன்கள் 118. 28BAALS= 118
மற்றும்    
12X2S = 24 Runs
58X1 = 58 Runs
இதிலிருந்து சச்சின் 200 ரன்களை எடுப்பதற்கு ஆன பந்துகளின் எண்ணிக்கை வெறும் 98 
ஆனால் சச்சின் எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை-147 Balls
அதனால்    
147-98 = 49 Balls 
இந்த மீதமுள்ள 49 பந்துகளில்  ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுத்திருந்தாலே நம் அணி இன்னும் 49 ரன்கள் கிடைத்திருக்கும். இதன்மூலம் நம் அணி ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்க்சில் அதிக ஓட்டங்களை பெற்ற அணி என்ற மகத்தான சாதனையை பெற்றிருக்கும். அதை பார்க்காமல் அவர்  மட்டும் சாதனை பெற்றால் போதும் என்று விளையாடியதால் அவர் இனிமேல் C கிரேடு சம்பளத்தையே பெறுவார் என்று அறிவிக்கபடுகிறது 


இனிமேலாவது மற்ற வீரர்கள் எப்படி ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுப்பது என்று கற்றுகொள்ளுங்கள் 
இப்படிக்கு  
அணி நிர்வாகம். 
 பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும்.
இப்படிக்கு உங்கள் 

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint