என்னை கவர்ந்த பத்து பெண் சிங்கங்கள் (தொடர் பதிவு)

நம்மையும் ஒரு ஆளா மதிச்சி தொடர் பதிவு எழுத கூப்பிட்ட நம்ம சமையலில் அட்டகாசம் செய்யும் நம்ம ஜலீலா அக்காவிற்கு ஒரு 'ஓ' போடுங்க.
  
நிபந்தனைகள் :-



1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,

2. வரிசை முக்கியம் இல்லை.,

3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,

4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்... 


1.  சமூக சேவை:   சரோஜினி நாயுடு 
          இந்தியாவின் ஹைதாராபாத் மாநிலத்தில் சரோஜினி நாயுடு அவர்கள் பிறந்தார்.  1915 முதல் 1918 ஆண்டுகளுக்கிடையில் அவர், இந்தியா முழுவதும், இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை மற்றும் தேசியப் பற்று குறித்து பல்வேறு சொற்பொழிவுகளை மேற்கொண்டார். யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ஆளுனராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுனரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமைடைந்தர்.










2.விண்வெளி வீராங்கனை:   கல்பனா சாவ்லா  






    இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி இவரே. STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும் பொழுது, விண்கலம் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
3. இசை:  எம். எஸ். சுப்புலட்சுமி


மிக இளம் வயதிலேயே இசை கற்றுக்கொள்ளத் துவங்கிய இவர் தனது பத்தாவது வயதில் முதல் இசைப்பதிப்பை வெளியிட்டார். சுப்புலட்சுமி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். இந்திய நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை பெற்றுள்ளார். 
4.தடகளம் : P.T. உஷா  
இந்தியா சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு அரை இறுதி வரை முன்னேறிய முதல் இந்தியர் ஆவார். இவர் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பல பதக்கங்களை நம் நாட்டிற்கு பெற்று தந்துள்ளார். மேலும் விவரம் தேவை பட்டால் 
http://www.ptusha.org இந்த தளத்திற்கு சென்று பார்த்து கொள்ளவும். 
    
5. அறிவியல் ஆராய்ச்சி : கீதா வரதன் 
  இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) முதல் பெண் தலைவராக பொறுப்பேற்றவர். மற்றும் இவர் ADRIN (Advanced Data Research Institute ) தலைமை பொறுப்பை வகித்தவர். 2008 ஆம் ஆண்டு நம் பாரத பிரதமர் டாக்டர் திரு. மன்மோகன் சிங் அவர்களிடம் இருந்து " ISRO METRIT AWARD-2008" என்ற விருதை பெற்றார்.
      


6. அரசியல் : டாக்டர் செல்வி. ஜெ. ஜெயலலிதா  
இவருடைய நிர்வாக திறன் என்னை மிகவும் கவர்ந்தது. இவர் கடந்த முறை ஆட்சியில் இருந்த போது தான் நம்முடைய அரசு அலுவலர்கள் ஒழுங்காக வேலை செய்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது. சென்னையில் இருந்த ரவுடிகளை ஒழித்தது, சந்தன கடத்தல் வீரப்பனை பிடித்தது போன்றவை என்னை கவர்ந்தது.
   
7. சினிமா :  சரோஜா தேவி 
இவருடைய நடிப்பு, அழகு, குழந்தை தனமான பேச்சு ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும் . இவர் நடித்த அன்பேவா படத்தை மிகவும் ரசித்து பார்த்திருக்கிறேன்.
  
8. வர்த்தகம் : இந்திரா நூயி 
பெப்சி கோ தலைவராக இருக்கிறார். உலகின் அதிகார மிக்க பெண்மணிகளில் ஒருவர் இவர். ஆண்கள் நிறைந்த இவ்வுலகில் தன்னுடைய கம்பெனியை வெற்றிகரமாக இயக்கி கொண்டிருக்கும் இவருடைய துணிச்சல் மிக்க நிர்வாக திறன் என்னை மிகவும் கவர்ந்தது  
9. பேச்சாளர் : பாரதி பாஸ்கர் 
என்னை கவர்ந்தவர்களுள் இவரும் ஒருவர். சாலமன் பாப்பையா பட்டி மன்றத்தில் ஒரு அணியின் தலைவராக இருந்து இவர் வாதாடும் விதம் அனைவருக்கும் பிடிக்கும். 
    
10. வீரம் : புனிதா அரோரா   
இவர் இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனெரல் ஆவார். இந்திய ராணுவத்தில் பதினைந்திற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று உள்ளார்.
  
தொடர் பதிவு எழுத நான் அழைப்பது 
புலவன் புலிகேசி 
வேர்களை தேடி( முனைவர் இரா. குணசீலன்)
வேலன் 


     டுடே லொள்ளு 
என்ன பார்க்காதீங்க நான் துணிய மாத்தனும் 
DRESS CHANGE
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறிவிட்டு செல்லுங்கள். 

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint