நம்முடைய பிளாக்கரில் "Reply This Comment" பட்டன் கொண்டுவர

நம்முடைய தளத்தில் நாம் எழுதும் பதிவுகளுக்கு நம் வாசகர்களிடம் இருந்து கருத்துக்கள் வரும். அப்படி வரும் கமெண்ட்ஸ்க்கு நாம் நன்றி சொல்லி பதில் ஒரு கமெண்ட்ஸ் போடுவோம். நாம் அப்படி போடும் போது கருத்து சொன்ன நண்பரின் பேரை டைப் செய்தோ அல்லது காப்பி செய்தோ யாருக்கு நாம் நன்றி சொல்கிறோம் என்று தெரிவிப்போம்.

     இந்த முறை தான் பெரும்பாலும் கடைபிடிக்க படுகிறது. ஆனால் அதற்கு பதில் இந்த reply என்ற பட்டன் நமக்கு வரும் comments பக்கத்தில் இருந்தால் நமக்கு ஒவ்வொரு முறையும் காப்பியோ, டைப்போ செய்ய தேவை இல்லை. இந்த reply என்ற பட்டனை அழுத்தியவுடன் அவர்களுடைய பேரே அதில் வந்து விடும்.



மேலே உள்ள படத்தில் இருப்பதை போல உங்களுடைய தளத்தில் கொண்டு வர கீழே பின் தொடருங்கள்.
 முதலில் உங்களுடைய தளத்தை ஒரு Backup எடுத்து வைத்து கொள்ளுங்கள். 
உங்களுடைய பிளாக்கர் அக்கௌன்ட்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
DASSBOARD- LAYOUT- EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE - செல்லவும். பின்பு கீழே உள்ள HTML CODE கண்டுபிடிக்கவும். (CTRL+4 டைப் செய்து வரும் விண்டோவில் அந்த கோடை டைப் செய்தால் சுலபாமாக கண்டு பிடிக்கவும். 
<b:include data='comment' name='commentDeleteIcon'/>

</span>

மேலே உள்ள கோடை கண்டு பிடித்த பின்பு  கீழே உள்ள HTML CODE காப்பி செய்து கண்டு பிடித்த கோடின் கீழே பேஸ்ட் செய்யவும்.





<span><a expr:href='&quot;https://www.blogger.com/comment.g?blogID=3543484279889644124&amp;postID=&quot; + data:post.id + &quot;&amp;isPopup=true&amp;postBody=%40%3C%61%20%68%72%65%66%3D%22%23&quot; + data:comment.anchorName + &quot;%22%3E&quot; + data:comment.author + &quot;%3C%2F%61%3E#form&quot;' onclick='javascript:window.open(this.href, &quot;bloggerPopup&quot;, &quot;toolbar=0,location=0,statusbar=1,menubar=0,scrollbars=yes,width=450,height=450&quot;); return false;'>

<img src='http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/reply04.png'/></a>

</span>

பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே படத்தில் உள்ளதை போல இருக்கவேண்டும். 



இப்படி வந்தால் இதுவரை நீங்கள் செய்த அனைத்தும் சரியே. ஒரு சபாஸ் போட்டு கொள்ளுங்கள்.

அடுத்து   ஒரு முக்கியமான விஷயம் மேலே உள்ள படத்தில் நான் 19 இலக்க எண்ணை வட்டமிட்டு காட்டியிருப்பேன். அதை நீங்கள் உங்களுடைய தளத்தில் blog Id எண்ணை மாற்றவேண்டும். அதை எப்படி கண்டு பிடிப்பது என்று கீழே பார்க்கவும் 

இப்பொழுது நீங்கள் HTML CODE சேர்த்து கொண்டிருக்கும் விண்டோவின் ADDRES BAR பாருங்கள் 

அதில் உங்களுடைய ID NO இருக்கும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.







நான் காட்டியிருக்கும் அந்த எண்களை மட்டும் காப்பி செய்து இந்த கோடினில் உள்ள எண்ணின் மீது REPLACE செய்து விடவும். அவ்வளவு தான் உங்கள் தளத்தில் REPLY பட்டன் சேர்ந்து இருப்பதை காண்பீர்கள். நல்ல உபயோகமுள்ளதாக இருக்கும்.


போயிடாதீங்க உங்களுடைய கருத்துகளையும் சொல்லி விட்டு போங்க. 

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint