பிளஸ்-2 மாணவி கடத்தி கற்பழிப்பு: தலைமை ஆசிரியர் போலீசில் சரண் புழல் சிறையில் அடைப்பு





சென்னை எம்.கே.பி.நகர் 17-வது கிழக்கு தெருவை சேர்ந்தவர் அமலன் (வயது46). இவர் எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் இதேபள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த லதா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கற்பழித்தார்.
 இது தொடர்பாக மாணவியின் தந்தை ராமன் கொடுத்த புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமை ஆசிரியர் அமலன் மீது பெண்ணை கடத்திச்சென்று கற்பழித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 துணை கமிஷனர் பாஸ்கரன் மேற்பார்வையில் எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் முரளி தலைமறைவான அமலனை தேடி வந்தார். போலீஸ் தேடுவதை அறிந்ததும் ஆசிரியர் அமலன், முக்கிய பிரமுகர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.
 இந்நிலையில் நேற்று மாலை அமலன் பணிபுரிந்த பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் பணி என்பது மிகவும் கண்ணியமானது. மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதில் ஆசிரியர்களுக்கும் பங்கு உள்ளது.
 ஆனால் உங்களது பள்ளியில் இப்படிப்பட்ட ஆசிரியரை எப்படி பணியில் அமர்த்தியிருந்தீர்கள்? உங்களை நம்பி குழந்தைகளை எப்படி தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப முடியும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நாங்கள் டிஸ்மிஸ் செய்து விட்டோம் என்று தெரிவிக்கப்பட்டது.
 இதனை ஏற்றுக்கொண்டு பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 இந்நிலையில் கடந்த ஒருவாரமாக தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் அமலன் நேற்று இரவு திடீரென எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் சரண் அடைந்தார்.
 
விடிய விடிய அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் இன்று காலையில் சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
 சாதாரண சைக்கிள் திருடன், பிக்பாக்கெட் திருடர்கள் போன்றவர்களை யெல்லாம் பத்திரிகையாளர்கள் முன்பு நிறுத்தி போட்டோ எடுக்க அனுமதிக்கும் போலீசார், சரண் அடைந்த தலைமை ஆசிரியர் அமலனை அவசர அவசரமாக கோர்ட்டில் ஆஜர்படுத்தியது ஏன் என்பது மர்மமாக உள்ளது.
 அதே நேரத்தில் ஆசிரியர் அமலனுக்கு அடைக்கலம் கொடுத்த முக்கிய பிரமுகரே அவரை உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு காரில் அழைத்து வந்து விட்டுச்சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலன், இதுபோல தனது வக்கீல் மூலமாக மாணவியை போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

என்னுடைய கருத்து :

     முக்கிய பிரமுகர்,முக்கிய பிரமுகர் -னு கூறும் அவர் யார்? அவர் மனிதரா அல்லது வேறு எதுவா? சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டியதுதானே. இந்திய சட்டம் மாதிரி ஓட்டைகள் நிறைந்த சட்டம் வேறு எங்கும் இருக்க முடியாது. சட்டத்தை ஆக்குவதும், திருத்துவதும் அந்த முக்கிய பிரமுகர் வழங்கும் .......பணத்தில்.   Tamilish



All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint