மும்பையில் தான் இந்த கூத்து: ப்ரீஸ்கூல் விண்ணப்பம் வாங்க 3 நாட்களாக க்யூவில் காத்திருப்பு.



"ஓடி விளையாடு பாப்பா" என்றார் பாரதியார், ஆனால் இன்றோ வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாகி வருவதாலும், தனிக்குடித்தனத்தால் குழந்தைகள‌ை பராமரிக்க ஆள் இல்லாத நிலையாலும் பெற்றோர்கள் விளையாட்டுப் பருவ பிள்ளைகளை சேர்க்க ப்ரீ ஸ்கூலையே நாடுகின்றனர் பெற்ற‌ோர்கள். பெற்றோர்களின் தேவை பெரிய பிசினசாகவும் ஆகி விட்டது. மும்பையில் ப்ரீ ஸ்கூல் பீவர் தொடங்கி விட்டது. மும்‌பையில் பெற்றோர்கள் பிரபல ப்ரீ ஸ்கூல் முன்னாள் விண்ணப்ப படிவம் வழங்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே க்யூவில் நிற்கின்றனர். ஒரு சில பெண்கள் குழந்தையை பார்த்துக் ‌கொள்ள வீட்டில் ஆள் இல்லாததால் குழந்தையுடனே வந்து காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இந்த க்யூவெல்லாம் எதற்கு : போலியாக டிமாண்ட் ஏற்படுத்தி தங்களை பிரபல படுத்திக் கொள்ள நினைக்கும் ப்ரீ ஸ்கூல் பள்ளி நிர்வாகங்களால் தானா இல்லை கவுரத்தை காட்ட பெற்றோர்கள் தேடும் அடையாளமா என்ற வாதமும் இருக்கிறது.



சரி கால் கடுக்க காத்திருந்தால் மட்டும் சீட் கிடைத்து விடுகிறதா என்றால் அதுவும் இல்லை. பெற்றோருக்கும் நேர்காணல், தொடர்ச்சியாக வாக்கியம் அமைத்து பேசக்கூட தெரியாத பிஞ்சுகளுக்கும் நேர்காணல். ஆயிரத்து எட்டு விதிமுறைகள், இவற்றை எல்லாம் தாண்‌டி தான் அட்மிஷன். அதிலும் ஒரு சில பள்ளிகள் விண்ணப்ப படிவங்களையே குறைவாகத்தான் விநியோகிக்கின்றன.



க்யூவில் காத்திருந்தும், இன்டர்வியூவ் போயும் குழந்தைகளுக்கு அட்மிஷன்  நிராகரிக்கப்படும் போது பிஞ்சு உள்ளங்களிலும் அநாவசியமாக இனம் புரியாத சிறு கவலை தொற்றிக் கொள்கிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். என்னதான் ப்ரீ ஸ்கூலில் பிள்ளைகள் கலர் கலரான பொம்மைகளோடும், பிளாஸ்டிக் பொருட்களுடனும் விளையாடினாலும், தாத்தா,பாட்டி கையை பிடித்துக் கொண்டும், அண்டை, அயலார் வீட்டு குழுந்தைகளுடனும் இயல்பாக, சுதந்திரமாக ஓடியாடி விளையாடியது போல் இருக்காது. எண்று தணியும் இந்த "ப்ரீ ஸ்கூல்" மோகம். Tamilish

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint