ஒபாமா ரேட்டிங் குறைந்தது



வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் செயல்பாட்டை அங்கீகரிக்கும் மக்களின் ரேட்டிங் வீதம், 46 சதவீதமாக குறைந்துள்ளதாக, தேசியளவிலான கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பிரபலத் தன்மை குறித்து, சி.பி.எஸ்., நியூஸ் என்ற "டிவி' சேனல், தேசியளவில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தியது.சி.பி.எஸ்., நியூஸ் "டிவி' சேனல் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு தகவல்:



சமீபத்திய கருத்துக் கணிப்பில், 46 சதவீதம் மக்கள் மட்டுமே, அதிபர் ஒபாமாவின் செயல்பாட்டை அங்கீகரிக்கின்றனர். 41 சதவீதம் பேர், அமெரிக்க அதிபராக, அவரது செயல்பாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப் பில், 50 சதவீதம் பேர், அதிபர் ஒபாமா தன் பணியை கையாளும் விதத்தை ஏற்றுக் கொள்வதாகவும், 39 சத வீதத்தினர் மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறினர்.





ஆனால், தற்போது அவரது ரேட்டிங் சதவீதம் குறைந்துள்ளதற்கு, உள்நாட்டு விவகாரங்களே காரணம் எனக் கூறப்படுகிறது.அதிபர் ஒபாமா பொருளாதார விவகாரங்களை கையாளும் வித த்தை, 41 சதவீதத்தினர் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளனர், 47 சதவீதத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.



அவர், சுகாதா ரத்துறை தொடர்பான விவகாரங்களை கையாளும் விதத்தை 36 சதவீதத்தினர் மட்டுமே, ஏற்றுக் கொண்டுள் ளனர். இவ்வாறு அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது Tamilish

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint