ஒரே வாரத்தில் 4வது தாக்குதல்: ஆஸி.,யில் இந்தியர்கள் பரிதாபம் ; இனவெறியில்‌‌‌லை என கெவின் ருட் மறுப்பு



மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரத்தில் இது 4வது தாக்குதல் . ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் இந்தியர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரஸ்பேன் நகரில் இரண்டு வெவ்வறு இடங்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தெற்கு பிரிஸ்பேன் மேக்கிரகர் எனும் இடத்தில் 25 வயது இளைஞர் தாக்கப்பட்டு, அவரது பர்சும் பறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சம்பவத்தில் தென்கிழக்கு பிரிஸ்பேனில் இந்திய டாக்சி டிரைவர் மீது அந்த டாக்சியில் பயணித்தவர்கள், முகத்தில் பலமுறை குத்தி மோசமாக தாக்‌கியதோடு காரையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ‌அவர்கள் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.





இனவெறி தாக்குதல் இல்லை : இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்வதால் வருத்தப்படுவதாக நேற்று அந்நாட்டு பிரதமர் கெவின் ருட் கூறியிருந்த நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள கெவின் ருட் இந்தியர்கள் மீதான தாக்குதல் இனவெறி தாக்குதல் இல்லை என மீண்டும் தெரிவித்துள்ளார்.





என்னுடைய கருத்து:

                            ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தொடர்ந்து தாக்கபடுகிறார்கள். ஆனால் உலகத்தில் வாழ்வதற்கு  மிகவும் பாதுகாப்பான நாடுகளின் முதல் ஐந்தில் இந்த நாடு உள்ளது.  மாணவர்களே நம் இந்திய நாட்டின் கல்வியை போல் உலகத்தில் வேறு எங்கும் இல்லை. நீங்கள் பணத்திற்காக வெளிநாடு செல்கின்றீர்கள்.  ஆனால் பணம் போனால் திரும்பி வரும் ஆனால் உயிர் போனால் அவ்வளவுதான். அப்புறம் பணத்தை வைத்து என்ன பண்ண முடியும். யோசியுங்கள் நண்பர்களே.      

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint